Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

கடந்த 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: சட்டம் ஒழுங்கு முற்றிலும் முடங்கிவிட்டது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

கடந்த 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: சட்டம் ஒழுங்கு முற்றிலும் முடங்கிவிட்டது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளதாக வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துவிட்டது என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Advertisement
ஒவ்வொரு நாளும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு, தினந்தோறும் குற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் தவெக அரசு தண்டனை அளித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநிலத்தில் காவல்துறை முறையாகச் செயல்படுகிறதா? அல்லது முதலமைச்சரைப் போலவே அதுவும் ஓய்வில் இருக்கிறதா? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு