ஞானேஷ்குமாருக்காக சொந்த நாட்டு மக்களுடனே மோடி போர் புரிகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரை போலீசார் தடுத்து வைத்தனர். மோடி, அமித்ஷா மீது அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அபிஜீத் தீப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவியைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.