Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து, குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள 61 கிராமங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

Advertisement
பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில், வைகை அணையின் மதகுகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்படி, அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் திறப்பு தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது குடிநீர் தேவைகள் பூர்த்தியாகவும், நீர் ஆதாரங்கள் மேம்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு