Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

சாதனைக்கு வயது ஒரு எல்லையல்ல: 51 வயதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த நாகப்பட்டினம் நபர்

சாதனைக்கு வயது ஒரு எல்லையல்ல: 51 வயதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த நாகப்பட்டினம் நபர்

சென்னையில் நேற்று நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினரின் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பங்கேற்ற ஒருவரின் தேர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேஷ்குமார், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடத்தைப் பெற்று, மருத்துவக் கல்வியைத் தொடரும் தனது நீண்டநாள் கனவை நனவாக்கியுள்ளார். வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதை அவர் தனது செயலால் நிரூபித்துள்ளார்.பள்ளிப் படிப்பை முடித்த காலத்திலேயே மருத்துவராக வேண்டும் என்ற விருப்பம் சுரேஷ்குமாருக்கு இருந்தது. ஆனால், அந்த ஆசையை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 2022-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேரும் முயற்சியாக நீட் தேர்வை தமிழில் எழுதினார். எனினும், அப்போது அவரால் வெற்றி பெற முடியவில்லை.கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும் மகளும் இணைந்து மருத்துவக் கல்லூரி இடங்களைத் தேர்வு செய்த சம்பவம், அவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது.அதன்பிறகு, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற அவர், 192 மதிப்பெண்களைப் பெற்றார்.

Advertisement
மேலும், 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்துள்ளார்.இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், ரத்தப் பரிசோதனைத் துறையின் சந்தைப்படுத்தல் பிரிவில் பணியாற்றி வந்ததாகவும், அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது முழுமையாக மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சொந்த ஊரில் உள்ள மருத்துவக் கல்லூரியிலேயே படிக்கவிருப்பதாகவும், மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவராகப் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு