Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், ஒரு கிராம் ரூ.110 அதிகரித்து ரூ.14,255-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று காலையில் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,112-க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும் விற்பனையானது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1,13,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,145-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு