சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், ஒரு கிராம் ரூ.110 அதிகரித்து ரூ.14,255-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று காலையில் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,112-க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும் விற்பனையானது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1,13,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,145-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.