Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணி சேயோன் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘மதுரை வீரன்’, ‘படைத்தலைவன்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்திலும் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குநர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 10-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று நடைபெற்ற பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தப் படத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார்.படத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.‘புரொடக்சன் நம்பர் 10’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தீவிரமாக நடைபெற உள்ளது. படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் படமாக இது உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 6 மணிக்கு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு