Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்வு

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்வு

பிரபலமான கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வெல்லம், நிலக்கடலை, ஏலக்காய் மற்றும் பேக்கிங் கவர்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், கடலைமிட்டாய் தயாரிப்புக்கான செலவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படி, கோவில்பட்டி கடலைமிட்டாயின் புதிய விலை உயர்வு இன்று (ஆகஸ்ட் 25, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement
இதுவரை ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய், தற்போது ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலையும் அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு