கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்வு

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்வு

பிரபலமான கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வெல்லம், நிலக்கடலை, ஏலக்காய் மற்றும் பேக்கிங் கவர்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், கடலைமிட்டாய் தயாரிப்புக்கான செலவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படி, கோவில்பட்டி கடலைமிட்டாயின் புதிய விலை உயர்வு இன்று (ஆகஸ்ட் 25, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய், தற்போது ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலையும் அதிகரித்துள்ளது.