Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

கைதுக்கு முன் மகன் இன்பநிதியை அணைத்த உதயநிதி ஸ்டாலின்; வைரலாகும் காட்சி

கைதுக்கு முன் மகன் இன்பநிதியை அணைத்த உதயநிதி ஸ்டாலின்; வைரலாகும் காட்சி
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய பேச்சு தொடர்பான வழக்கில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தஞ்சாவூர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கைது நடவடிக்கைக்காக போலீசார் அவரது வீட்டைச் சூழ்ந்திருந்த நிலையில், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வீட்டிலிருந்து வெளியேறி போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்கு முன், தனது மகன் இன்பநிதியை உதயநிதி ஸ்டாலின் அன்புடன் அணைத்துக் கொண்டார். பின்னர் புன்னகையுடன் போலீசாருடன் சென்ற அந்த தருணத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.இதற்கிடையில், கைது நடவடிக்கைக்காக போலீசார் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா.
Advertisement
சுப்பிரமணியன் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்த நியாயமான காரணமும் இன்றி அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.உதயநிதியை போலீசார் வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, நீலாங்கரை இல்லம் முன்பு திரண்டிருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி, உதயநிதி ஸ்டாலினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். அவரது கைது சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு