கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் உள்ள தகுதியான கைதிகள், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கைதிகள் காலை 6 அல்லது 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே சென்று பணிபுரியலாம். பின்னர் மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.சிறையில் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் கைதிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.