கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்

கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் உள்ள தகுதியான கைதிகள், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கைதிகள் காலை 6 அல்லது 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே சென்று பணிபுரியலாம். பின்னர் மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.சிறையில் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் கைதிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், பணிக்காக வெளியே செல்லும் கைதிகளின் நடவடிக்கைகள் சிறை அதிகாரிகளால்தொடர்ந்துகண்காணிக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஜார்க்கண்டில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, ஹசாரிபாக் காசிடிஹ் மத்திய சிறை மற்றும் தும்கா மத்திய சிறை ஆகிய 4 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.