Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயம்

கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயம்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் வைப்புத் தொகைகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டி வழங்கும் வகையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கடன்களுக்கான நிதி, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத் தொகைகள் மூலமாகவும், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு நிறுவனத்திடம் பெறப்படும் கடன் மூலமாகவும் திரட்டப்படுகிறது.

Advertisement
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வட்டியுடன் கூடுதலாக 0.25 சதவீத வட்டி வழங்கப்படும். மேலும், தங்க நகைக் கடனில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் அல்லது தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் ஆகிய இரண்டில் குறைவான தொகையே கடனாக வழங்கப்பட உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு