Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகை உருவாக்குவோம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகை உருவாக்குவோம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி உள்ளிட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரம் இணையும் நாளில் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் சேரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திட வேண்டும் எனக் கூறி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அநீதிக்கு எதிராக அறம் வெற்றி பெறும் என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் கடமையில் இருந்து விலகாமல் செயல்பட வேண்டும் என்பதையும் ஸ்ரீகிருஷ்ணர் போதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், தர்மத்தின் பாதையில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி, உயர்ந்த வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் செழிக்கும் நல்லுலகை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு