Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணை

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணை

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, வரும் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரை பெங்களூருவில் ஆகஸ்டு 3-ம் தேதி சந்தித்து பேச தமிழக முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது.ஆனால், தற்போதைய சூழ்நிலை சரியாக இல்லாததால் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூருவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் அலட்சிய போக்கால் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

Advertisement
நடப்பு பாசன ஆண்டில் ஏற்பட்டுள்ள 26,954 டிஎம்சி நீர் பற்றாக்குறையை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஆகஸ்டு 12-ம் தேதிக்குள் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, கடந்த 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பும் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, வரும் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதனுடன், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் விசாரணைக்கு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு