காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணை

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணை

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, வரும் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரை பெங்களூருவில் ஆகஸ்டு 3-ம் தேதி சந்தித்து பேச தமிழக முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது.ஆனால், தற்போதைய சூழ்நிலை சரியாக இல்லாததால் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூருவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் அலட்சிய போக்கால் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. நடப்பு பாசன ஆண்டில் ஏற்பட்டுள்ள 26,954 டிஎம்சி நீர் பற்றாக்குறையை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஆகஸ்டு 12-ம் தேதிக்குள் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, கடந்த 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பும் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, வரும் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதனுடன், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் விசாரணைக்கு வருகிறது.