காமன்வெல்த் ஈட்டி எறிதல்: இன்று தகுதிச்சுற்றில் களமிறங்கும் நீரஜ் சோப்ரா
காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா இன்று நடைபெறும் தகுதிச்சுற்றில் பங்கேற்கிறார். தங்கப்பதக்கத்துக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் அவர், பிற்பகல் 2.55 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.இந்தப் பிரிவில் பாகிஸ்தானின் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம், டிரினிடாட் அண்ட் டொபாக்கோவைச் சேர்ந்த உலக சாம்பியன் கேஷோன் வால்காட், கிரனடாவின் முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்கா ஆகியோருடன் இந்தியாவின் ரோகித் யாதவ், யாஷ் விர் சிங் உள்ளிட்ட பலரும் போட்டியிடுவதால் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.தகுதிச்சுற்றின் முடிவில் சிறந்த 12 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். பதக்கத்தை நிர்ணயிக்கும் இறுதிச்சுற்று நாளை நள்ளிரவு 12.45 மணிக்கு நடைபெற உள்ளது.