Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்த ‘எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்’ படப்பிடிப்பு

கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்த ‘எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்’ படப்பிடிப்பு

கர்நாடக இசை உலகில் தனக்கென தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. தனது இனிமையான குரலால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், ‘குஞ்சம்மா’ என்ற அன்புப் பெயராலும் அழைக்கப்பட்டார். திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி புகழ்பெற்றார். பத்மபூஷன், பாரதரத்னா, சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி, கடந்த 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் மறைந்தார்அவரது இசைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை, கலைத்துறையில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவர் பெற்ற சாதனைகளை மையமாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. ‘ஜெர்ஸி’, ‘கிங்டம்’ உள்ளிட்ட தெலுங்கு படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.

Advertisement
அல்லு அரவிந்த், பன்னிவாசு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, நயன்தாரா, ருக்மணி வசந்த், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘எம்.எஸ். - ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்’ (M S - A Legacy on Screen) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, ‘எம்.எஸ். - ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்’ படத்தின் கிளாப் போர்டை அடித்து படப்பிடிப்பை அவர் தொடங்கி வைத்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு