Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலம் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

நீர்வரத்து குறைந்து, பாதுகாப்பான சூழல் மீண்டும் நிலைபெற்ற பின்னரே சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருவிப் பகுதி மற்றும் வன எல்லைக்குள் அத்துமீறி யாரும் நுழைய வேண்டாம் என்றும் வனக்கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு