Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

மின்வெட்டை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் - டெண்டர் வெளியீடு

மின்வெட்டை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் - டெண்டர் வெளியீடு

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக திடீர் மின்தடை ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின் தேவை உயர்வதால் துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகளில் அதிக சுமை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில், மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணியும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தடையை சமாளிக்கும் நோக்கில், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளது. மொத்தம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

வரும் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான அதிக மின் தேவை நேரத்தில் 3,000 மெகாவாட் மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்திற்கு தேவையான 1,500 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு