Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் தினசரி 4 லட்சம் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து 45-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் லாரிகள் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு வரும் ஆவின் பால் உடனடியாக விற்றுத் தீர்ந்து வருவதால், பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், சென்னை மாதவரம் பால் பண்ணைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கு ஆய்வு மேற்கொண்டார். பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான நிலவரங்களை அதிகாரிகளிடம் அவர் விரிவாக கேட்டறிந்தார்.

Advertisement

தொடர்ந்து, ரூ.2.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மைய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும், மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாதவரம் பால் பண்ணையில் விற்பனைக்காக தினமும் 3 லட்சம் முதல் 3.60 லட்சம் லிட்டர் வரை பால் பதப்படுத்தப்படுகிறது. மேலும், 3.75 ஆயிரம் லிட்டர் பாலை குளிர்விக்கும் அறைகளும், 80 மெட்ரிக் டன் பால் பவுடரை சேமித்து வைக்கும் அறைகளும் இங்கு உள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு