Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 25 அக்டோபர் 2026 | 8 ஐப்பசி பராபவ வருடம்

கனமழை எதிரொலி: கோவையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி: கோவையில் பள்ளிகளுக்கு  நாளை  விடுமுறை

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, நாளை (அக்டோபர் 26, திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

Advertisement
மேலும், கோவை மாவட்டத்தில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மழையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு