கனமழை எதிரொலி: கோவையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
25 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கனமழை எதிரொலி: கோவையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி: கோவையில் பள்ளிகளுக்கு  நாளை  விடுமுறை

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, நாளை (அக்டோபர் 26, திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மேலும், கோவை மாவட்டத்தில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மழையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.