கணவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம்: மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்
கணவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம்: மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங், தனது கணவர் ஜாக்கி பக்னானியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இருவரும் இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், "நாங்கள் இருவரும் ஒன்றாக எப்படி வேலை செய்கிறோம் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கான பதில் மிகவும் எளிது. எங்கள் உரையாடல்களில் பாதி நேரம் வேலை பற்றியே இருக்கும். மீதமுள்ள நேரம் என்ன சாப்பிடலாம் என்பதையே பேசிக் கொண்டிருப்போம். எங்களின் சிந்தனைகள் ஒன்றோடொன்று நன்றாக ஒத்துப்போகின்றன. வாழ்க்கையை இணைந்து உருவாக்குவது அழகான பயணம் என்றால், இருவருக்கும் மிகவும் பிடித்த துறையில் ஒன்றாக செயல்படுவது அதைவிட மகிழ்ச்சியான அனுபவம்," என்று குறிப்பிட்டுள்ளார்.ரகுல் பிரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி, 2021-ஆம் ஆண்டு தங்களது காதல் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு கோவாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜாக்கி பக்னானி, 2009-ஆம் ஆண்டு வெளியான கல் கிஸ்னே தேகா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் யங்கிஸ்தான், வெல்கம் டு கராச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தயாரிப்பாளராக சர்ப்ஜித் மற்றும் சமீபத்தில் அக்சய் குமார், டைகர் ஷெராப் நடித்த படே மியான் சோட்டே மியான் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.