Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

கணவரின் பெற்றோரை கவனிப்பது மருமகளின் கடமை அல்ல: கர்நாடக ஐகோர்ட்டு கருத்து

கணவரின் பெற்றோரை கவனிப்பது மருமகளின் கடமை அல்ல: கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
கணவரின் பெற்றோரை பராமரிப்பது மருமகளின் கட்டாய பொறுப்பு அல்ல என்றும், ஒரு பெண் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல கணவர் வீட்டில் உள்ளவர்களின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.பெங்களூருவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு, விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கும் குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை நீதிபதி சில்லா குர் சுமலதா விசாரித்தார். விசாரணையின்போது கணவர் தரப்பு வக்கீல், தனது கட்சிக்காரரின் மனைவி கணவரின் பெற்றோரை முறையாக கவனிப்பதில்லை என்றும், வீட்டு வேலைகளை சரியாக செய்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், கணவரின் அனுமதியின்றி அவர் பலமுறை தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றதாகவும் வாதிட்டார்.இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அதில், ஒரு மனைவி வீட்டுப் பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
Advertisement
பெற்றோரை பராமரிப்பதற்கான முதன்மையான பொறுப்பு அவர்களின் மகன் அல்லது மகளுக்கே உள்ளது என்றும், அந்த பொறுப்பை மருமகன் அல்லது மருமகள் மீது சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.மேலும், ஒரு இந்திய பெண் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்கு கணவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும் என எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி கூறினார்.திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான உரிமையை வழங்குவதல்ல. ஒரு பெண் தனது விருப்பப்படி பெற்றோர் வீட்டுக்குச் செல்வது அவரது அடிப்படை உரிமையாகும். அதேபோல், மனைவி தனது விருப்பத்துக்கு மாறாக குறிப்பிட்ட முறையில் மட்டுமே வாழ வேண்டும் என கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு