Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

அசாம், மேற்கு வங்காள இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

அசாம், மேற்கு வங்காள இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து, வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தின் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தின் நவ்கான் மக்களவைத் தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கராவும், நந்திகிராம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் ஹசி ராணியும் வெற்றி பெற்றனர். அசாமின் நவ்கான் மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர் தேவசிஷ் சர்மா வெற்றி பெற்றார். இதற்கிடையே, புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.

Advertisement
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், அசாமின் நவ்கான் மக்களவைத் தொகுதி மற்றும் மேற்கு வங்காளத்தின் நந்திகிராம், ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளில் கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) நல்லாட்சி திட்டத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், கட்சித் தொண்டர்களின் உழைப்பையும் பாராட்டியுள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற என்.டி.ஏ. கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் நலனையும், அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு தொடர்ந்து உழைக்க இந்த இடைத்தேர்தல் முடிவுகள் கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு