Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியாவது செய்து முடித்துவிடுவேன் - மிருணாள் தாக்கூர்

ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியாவது செய்து முடித்துவிடுவேன் - மிருணாள் தாக்கூர்

ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், எந்த வழியிலாவது அதை செய்து முடித்துவிடுவேன் என்று நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாக்கூர், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் அவர் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தனது குணநலன்கள் குறித்து பகிர்ந்துகொண்ட தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. தன்னிடம் தனக்கே மிகவும் பிடித்த குணம் எது என்ற கேள்விக்கு பதிலளித்த மிருணாள் தாக்கூர், தனது பிடிவாதத்தை குறிப்பிட்டார்.

Advertisement
ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று மனதில் தீர்மானித்துவிட்டால், அதை எப்படியாவது செயல்படுத்திக் காட்டிவிடுவேன் என்றும், இந்த குணம் தன்னுடன் பழகும் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், மற்றவர்களை எளிதில் மன்னித்துவிடுவது தனது பலவீனம் என்றும் மிருணாள் தாக்கூர் தெரிவித்தார். ஒருவர் தன்னை ஏமாற்றினாலும், அதை உடனடியாக தன்னால் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். தனது மனம் இளகிய தன்மையே தன்னிடம் தனக்குப் பிடிக்காத குணம் என்றும் மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு