Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

ஒரே இரவில் 2 எம்மி விருதுகள்... வரலாறு படைத்த நடிகர் மேத்யூ ரைஸ்

ஒரே இரவில் 2 எம்மி விருதுகள்... வரலாறு படைத்த நடிகர் மேத்யூ ரைஸ்

அமெரிக்காவின் 78-வது எம்மி விருது விழாவில் நடிகர் மேத்யூ ரைஸ் இரண்டு முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 78-வது எம்மி விருது விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பீகாக் திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் மேத்யூ ரைஸ், ‘தி பீஸ்ட் இன் மீ’ (The Beast in Me) தொடரில் நடித்ததற்காக, லிமிடெட் அல்லது ஆந்தாலஜி தொடரின் சிறந்த முன்னணி நடிகர் பிரிவில் எம்மி விருதை வென்றார். தொடர்ந்து, ‘விடோஸ் பே’ (Widow’s Bay) தொடருக்காக நகைச்சுவைத் தொடரின் சிறந்த முன்னணி நடிகர் பிரிவிலும் அவர் விருது பெற்றார்.

Advertisement
இதன் மூலம் ஒரே எம்மி விழாவில் இரண்டு வெவ்வேறு முன்னணி நடிகர் பிரிவுகளில் விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையை மேத்யூ ரைஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ‘தி அமெரிக்கன்ஸ்’ (The Americans) தொடருக்காக நாடகத் தொடரின் சிறந்த முன்னணி நடிகர் விருதை அவர் கைப்பற்றியிருந்தார். தற்போது நாடகம், நகைச்சுவை மற்றும் லிமிடெட் தொடர் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளிலும் சிறந்த முன்னணி நடிகருக்கான எம்மி விருதை வென்ற முதல் ஆண் நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையையும் மேத்யூ ரைஸ் படைத்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு