ஒரே இரவில் 2 எம்மி விருதுகள்... வரலாறு படைத்த நடிகர் மேத்யூ ரைஸ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒரே இரவில் 2 எம்மி விருதுகள்... வரலாறு படைத்த நடிகர் மேத்யூ ரைஸ்

ஒரே இரவில் 2 எம்மி விருதுகள்... வரலாறு படைத்த நடிகர் மேத்யூ ரைஸ்

அமெரிக்காவின் 78-வது எம்மி விருது விழாவில் நடிகர் மேத்யூ ரைஸ் இரண்டு முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 78-வது எம்மி விருது விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பீகாக் திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் மேத்யூ ரைஸ், ‘தி பீஸ்ட் இன் மீ’ (The Beast in Me) தொடரில் நடித்ததற்காக, லிமிடெட் அல்லது ஆந்தாலஜி தொடரின் சிறந்த முன்னணி நடிகர் பிரிவில் எம்மி விருதை வென்றார். தொடர்ந்து, ‘விடோஸ் பே’ (Widow’s Bay) தொடருக்காக நகைச்சுவைத் தொடரின் சிறந்த முன்னணி நடிகர் பிரிவிலும் அவர் விருது பெற்றார். இதன் மூலம் ஒரே எம்மி விழாவில் இரண்டு வெவ்வேறு முன்னணி நடிகர் பிரிவுகளில் விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையை மேத்யூ ரைஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ‘தி அமெரிக்கன்ஸ்’ (The Americans) தொடருக்காக நாடகத் தொடரின் சிறந்த முன்னணி நடிகர் விருதை அவர் கைப்பற்றியிருந்தார். தற்போது நாடகம், நகைச்சுவை மற்றும் லிமிடெட் தொடர் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளிலும் சிறந்த முன்னணி நடிகருக்கான எம்மி விருதை வென்ற முதல் ஆண் நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையையும் மேத்யூ ரைஸ் படைத்துள்ளார்.