Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 30 அக்டோபர் 2026 | 13 ஐப்பசி பராபவ வருடம்

ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றடைந்தார் விராட் கோலி

ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றடைந்தார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டைச் சென்றடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. டி20 தொடர் நிறைவடைந்ததும் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளன.

Advertisement
இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 4-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவர் வெளியே வந்தபோது, அவரைக் காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர். சிலர் கோலியுடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் பெறவும், கைகுலுக்கவும் ஆர்வம் காட்டினர். இருப்பினும், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் ரசிகர்களைத் தடுத்து நிறுத்தினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு