Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 30 அக்டோபர் 2026 | 13 ஐப்பசி பராபவ வருடம்

அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம்: வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு

அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம்: வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்சவரம்பை மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புதிய வயது வரம்பு உயர்வானது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC, BC(M)), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC), பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வயது தளர்வுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

Advertisement
இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இந்தச் சலுகை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், ஏற்கனவே வயது வரம்பை நெருங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு