Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ‘ஐஸ் ஓட்டல்’ – எங்கு இருக்கிறது தெரியுமா?

ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ‘ஐஸ் ஓட்டல்’ – எங்கு இருக்கிறது தெரியுமா?
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏ.சி. அறைகளை நாடுவது வழக்கமாகிவிட்டது. நகரமயமாக்கலால் மரங்கள் குறைந்து, கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட ஒரு ஓட்டல் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது கற்பனை அல்ல; உண்மையில் இப்படியொரு ஓட்டல் உள்ளது. வடக்கு சுவீடனில், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் ஜுக்காஸ்ஜார்வியில் இந்த வித்தியாசமான ஐஸ் ஓட்டல் அமைந்துள்ளது. சுமார் 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இது, 1989-ம் ஆண்டு முதல் முற்றிலும் பனியைக் கொண்டு கட்டப்பட்ட உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய ஐஸ் ஓட்டலாக அறியப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு தேவையான பனிக்கட்டிகள் அருகே ஓடும் டோர்ன் ஆற்றில் இருந்து பெறப்படுகின்றன. ஆண்டின் 365 நாட்களும் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு கடுமையான குளிரை சமாளிப்பதற்கான பிரத்யேக ஆடைகளும் வழங்கப்படுகின்றன. அவை அதிகபட்சமாக மைனஸ் 13 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிரைத் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.ஓட்டலின் உள்ளே சுமார் 2,100 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான ‘ஆர்ட் ஹால்’ அமைந்துள்ளது. இதனுடன் குளியலறை, 9 அறைகள், ஐஸ் கேலரி, 9 டீலக்ஸ் அறைகள் மற்றும் ஐஸ் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் உள்ளன. நவீன காலத்திற்குத் தேவையான வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள் பனிக்கட்டிகளை தத்ரூபமாக செதுக்கி, ஓட்டலின் உட்புறத்தை கலைநயத்துடன் உருவாக்குகின்றனர். ஓட்டலுக்குள் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் அளவில் பராமரிக்கப்படுகிறது. கோடை காலத்திலும் பனிக்கட்டிகள் எளிதில் உருகாத வகையில் அதன் உட்புற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே அமைந்துள்ள இந்தப் பகுதியில் கோடை மாதங்களில் தொடர்ந்து 50 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும்.
Advertisement
அந்த சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உணவகங்கள், அலுவலகங்கள், அறைகள், தேவாலயம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.வித்தியாசமான பனிக்கட்டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவம் கிடைக்கிறது. இலையுதிர் காலம் குளிர்காலமாக மாறும் நேரத்தில் சைக்கிள் ஓட்டுதல், மீன்பிடித்தல், சிற்ப வேலை, பனிசறுக்கு உள்ளிட்ட பல்வேறு சாகச நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். விருந்தினர்கள் தேவையான சோதனைகளுக்குப் பிறகே ஓட்டலில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.சூரிய ஒளி படும்போது பனிக்கட்டி ஓட்டல் உருகிவிடாதா என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஆனால் வசந்த காலம் வந்ததும் பனிக்கட்டிகள் உருகி மீண்டும் டோர்ன் ஆற்றுக்கே சென்றுவிடுகின்றன. இதனால், இந்த ஓட்டல் ஆண்டுதோறும் புதிதாக உருவாக்கப்படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.ஒவ்வொரு ஆண்டும் ஐஸ் ஓட்டலின் உள் வடிவமைப்புகளை உருவாக்க உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதில் தேர்வு செய்யப்படும் சுமார் 50 கலைஞர்கள் சுவீடனுக்குச் சென்று, ஓட்டலின் புதிய கட்டமைப்புகளை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஓட்டலின் தோற்றம் சற்று மாறுபட்டதாக இருக்கும். நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, ஜனவரியில் இறுதிக்கட்டத்தை எட்டிய பிறகு ஓட்டல் விருந்தினர்களுக்காக திறக்கப்படுகிறது. இந்த ஐஸ் ஓட்டல் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.சுவீடனின் 7 அதிசயங்களில் ஒன்றாகவும் இந்த ஐஸ் ஓட்டல் பட்டியலிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு