இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் பரிமாற்றத்தை ஐபிஎல் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும், தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியிலும் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்காக களமிறங்க உள்ளார்.
Advertisement
ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பு வகித்துள்ள அவர், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பயிற்சியாளர் – ரிக்கி பாண்டிங்; எனது அணி – ஒட்டுமொத்த பஞ்சாப். நான் உங்கள் பின்னால் நிற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.