Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுகள், அங்கு வாழ்ந்த மக்களின் சிறப்பான நீர் மேலாண்மை முறைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இதுவரை நடைபெற்ற பல்வேறு கட்ட அகழாய்வுகளில் 2 முதல் 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குடிநீர், பாசனம் மற்றும் சாயத்தொழில் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.தற்போது நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், ஒரே குழிக்குள் அடுத்தடுத்து மூன்று வகையான வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisement
இதனுடன், ஏற்கனவே 2 அடுக்குகள் கொண்ட ஒரு உறைகிணறும் கண்டறியப்பட்டது.இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள மற்றொரு உறைகிணற்றில் 8 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. இந்த உறைகிணறு எந்தவித சேதமும் இன்றி காணப்படுவதால், இதற்கு கீழும் மேலும் சில அடுக்குகள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அதன் முழு அமைப்பையும் அறியும் வகையில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு