Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு: தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்; மாநிலம் முழுவதும் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு: தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்; மாநிலம் முழுவதும் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காலை தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசு அலட்சியம் காட்டுவதாகவும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க அரசு தவறிவிட்டதாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் ஆறுகள் வறண்டு பாலைவனத்தைப் போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். தி.மு.க. தலைவர் முதல்வராக இருந்திருந்தால் இத்தகைய சூழல் உருவாகியிருக்காது என்றும், தற்போதைய அரசின் நிர்வாகத் திறன் குறைவால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.மேலும், குறுவை சாகுபடியை பாதுகாக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், சம்பா சாகுபடி குறித்த அச்சத்தில் விவசாயிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி நடத்த காங்கிரஸின் ஆதரவு தேவைப்படுவதால், கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்க முதல்வர் விஜய் தயங்குகிறார் என்றும், மத்திய அரசை விமர்சிக்கவும் அவர் முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.இதையடுத்து, முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி சர்ச்சை எழுந்தது.இதற்கு பதிலளித்த த.வெ.க.
Advertisement
பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பின் மாண்பை உணராமல் பேசப்பட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என தெரிவித்தார். முதல்-அமைச்சர் பதவியின் மரியாதையையும் பொறுப்பையும் உணராமல் எல்லை மீறிய வகையில் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும், இதுபோன்ற பேச்சுகளுக்கு மக்கள் தக்க பதிலை அளிப்பார்கள் என்றும், கட்சித் தலைவர் அறிவுறுத்திய நாகரிக அணுகுமுறையால் தாங்கள் அமைதியை கடைப்பிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார், தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு அனுப்பிய மனுவில், உதயநிதியின் பேச்சு தொடர்பான காணொளியை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.அதேபோல், உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு