Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

உடலுறுப்பு கொடையாளர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம்: முதல்-அமைச்சர் விஜய்

உடலுறுப்பு கொடையாளர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம்: முதல்-அமைச்சர் விஜய்

தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: உடலுறுப்பு தானத்தின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதி தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த பிறகும், அவரது உடலுறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்வது உயர்ந்த மனிதநேயச் செயலாகும்.

Advertisement
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போருக்கு தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும் வாழ்க்கையையும் அளிக்கிறது. மனிதநேயத்தின் அடையாளமாக, பல உயிர்களுக்கு மறுவாழ்வை வழங்கிய உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்த நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம் என முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு