Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

இரட்டைமலை சீனிஇரட்டைமலை சீனிவாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்வாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்

இரட்டைமலை சீனிஇரட்டைமலை சீனிவாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்வாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்

இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இரட்டைமலை சீனிவாசன் தொடர்ந்து போராடியவர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பறையன்’ இதழை தொடங்கி கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பியவர் என்றும் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலை அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலிமையாக வெளிப்படுத்திய முன்னோடிகளில் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
சமத்துவம் மற்றும் சுயமரியாதை கொண்ட சமூகத்தை உருவாக்க அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசனின் சமூக நீதிக்கான பயணத்தையும் சீர்திருத்தக் கருத்துகளையும் நினைவு நாளில் போற்றுவதாகக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன், அவரது புகழை வரும் தலைமுறைகளும் தொடர்ந்து நினைவுகூர வேண்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு