இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நியூசிலாந்துடனான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கையெழுத்தானது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
Advertisement
மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 19-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய தொழில் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயனடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.