இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா உடல் சோர்வு காரணமாக, முழு உடல் பரிசோதனைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கட்சி கூறியுள்ளது. மருத்துவமனையில் டி.ராஜாவுக்கு தேவையான உதவிகளை கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், அவரது மகளும் தேசியக் குழு உறுப்பினருமான அபராஜிதா, மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.