இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

09 Sep 2026 www.thinathulir.com

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா உடல் சோர்வு காரணமாக, முழு உடல் பரிசோதனைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கட்சி கூறியுள்ளது. மருத்துவமனையில் டி.ராஜாவுக்கு தேவையான உதவிகளை கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், அவரது மகளும் தேசியக் குழு உறுப்பினருமான அபராஜிதா, மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.