Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

இதுவரை இல்லாத அளவுக்கு.. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு

இதுவரை இல்லாத அளவுக்கு.. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 740.80 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.இதற்கு முன்பு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகபட்ச நிலையில் இருந்தது. பிப்ரவரி 27-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அது 728.494 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.68 லட்சம் கோடி) இருந்தது.ஆனால், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் மற்றும் அதனால் உருவான பதற்றமான சூழல் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரூபாய் மதிப்பு சரிந்த நிலையில், அதை சமாளிக்க ரிசர்வ் வங்கி டாலர்களை விற்பனை செய்தது. இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பிலும் சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி சலுகை அடிப்படையிலான அந்நிய செலாவணி மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

Advertisement
இந்த நடவடிக்கையின் மூலம் 132 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான புதிய நிதி வரவு ஏற்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 740.803 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.69 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.அந்நிய செலாவணி கையிருப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் வெளிநாட்டு கரன்சி சொத்துகளின் மதிப்பு 600.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பும் 2.191 பில்லியன் டாலர் அதிகரித்து, 116.409 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதனிடையே, சர்வதேச நிதியத்தில் (IMF) இந்தியாவுக்கான தொகுப்பு 11 மில்லியன் டாலர் குறைந்து, ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி 4.914 பில்லியன் டாலராக உள்ளது.இந்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு