Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், சுதா தீனதயாளன் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் மேடையில் இருந்ததாகவும், அப்போது சுதா பேசியதை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்றும் தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement
இதற்கிடையே, முதல்-அமைச்சர் குறித்து அநாகரிகமாகப் பேசியதாக சுதா தீனதயாளன் மீதும், கூட்டத்தை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் சென்னை பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி உதயகுமார் அளித்த புகாரின் பேரில், சுதா தீனதயாளன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தற்போது அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு