Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

திருவாரூர் அருகே ஆன்லைன் ரம்மி கடனை அடைக்க மூதாட்டி கொலை: கலெக்டர் அலுவலக தற்காலிக ஊழியர் கைது

திருவாரூர் அருகே ஆன்லைன் ரம்மி கடனை அடைக்க மூதாட்டி கொலை: கலெக்டர் அலுவலக தற்காலிக ஊழியர் கைது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக 60 வயது மூதாட்டியைக் கொலை செய்து, அவரது தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள பாபநாசம் உத்தானி மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் கலைச்செல்வி (60). கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரை மர்ம நபர் தலையில் பலமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருபவருமான அறிவுமணி (28), போலீசாருடன் இணைந்து குற்றவாளியைத் தேடுவதுபோல் செயல்பட்டு வந்துள்ளார்.

Advertisement
அவரது நடவடிக்கைகளிலும், அவர் அளித்த பதில்களிலும் முரண்பாடுகள் இருப்பதை கவனித்த போலீசார், அறிவுமணியைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, கலைச்செல்வியைக் கொலை செய்தது தான்தான் என அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அறிவுமணிக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததும், அதில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து கடனில் சிக்கியதும் தெரியவந்தது. கடனைத் திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவித்த அவர், தனியாக வசித்து வந்த கலைச்செல்வியைக் கொலை செய்து, அவரது நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு