2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் திரிஷா ஜாலி–காயத்ரி கோபிச்சந்த் இணை, மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் பேர்லி டான்–தினா முரளிதரன் ஜோடியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனைகள், 18–21, 9–21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை இழந்தனர். முதல் செட்டில் இரு ஜோடிகளும் 10–10 என சமநிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த சில தவறுகள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தின.
Advertisement
இதனால் அந்த செட்டை 18–21 என மலேசிய ஜோடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் மலேசிய வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். இதனால் திரிஷா ஜாலி–காயத்ரி கோபிச்சந்த் ஜோடி 9–21 என அந்த செட்டையும் இழந்தது. கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த இந்திய ஜோடி, ஆசிய விளையாட்டிலும் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதியிலேயே வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.