Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

அமெரிக்காவில் வினோதம்: சேலைக்கு ‘கவுன்’ என பெயரிட்டு விற்பனை

அமெரிக்காவில் வினோதம்: சேலைக்கு ‘கவுன்’ என பெயரிட்டு விற்பனை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று, தனது புதிய ஆடை வடிவமைப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.புதிய ஆடை வடிவமைப்பு எனக் கூறி அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய உடையின் புகைப்படத்தை பார்த்த இந்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அந்த ஆடை பாரம்பரிய இந்திய சேலையை அப்படியே ஒத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.சேலையை புதிய வடிவமைப்பாக அறிமுகப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் விலையும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆடையின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 ஆயிரம் என கூறப்படுகிறது.

Advertisement
இதையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் அந்த நிறுவனத்தை விமர்சிக்கத் தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து நிறுவனம் ஆடையின் பெயரை மாற்றியது. முதலில் பூவேலைப்பாடுகள் கொண்ட மேக்ஸி ஆடை என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதன் பெயர் ‘சேலையால் ஈர்க்கப்பட்ட கவுன்’ என மாற்றப்பட்டது.ஆனால், பெயர் மாற்றப்பட்ட பின்னரும் விமர்சனங்கள் ஓயவில்லை. பாரம்பரிய சேலையை எப்படி கவுன் என அழைக்கலாம் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி, தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு