Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

மனைவியின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற கணவன் எந்த எல்லை வரை செல்வார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. அசோக் செல்வனும், பிரீத்தி முகுந்தனும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மனைவியின் விருப்பம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அசோக் செல்வன் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். அதன் ஒரு பகுதியாக, மலைப்பகுதியில் அமைந்துள்ள அழகான வீட்டை அதன் உரிமையாளரான ரேவதியிடம் இருந்து வாங்குகிறார். ஆனால், அந்த வீட்டை வாங்கிய பிறகு அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றால் இருவரும் மன அழுத்தத்துக்கு உள்ளாவதுடன், பணத்தையும் இழக்க நேரிடுகிறது. இந்தச் சூழலில் நடைபெறும் ஒரு கொலை, இருவரையும் மேலும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அந்தப் பிரச்சினைகளில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன், இந்தப் படத்திலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார்.

Advertisement
பிரீத்தி முகுந்தனும் கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் அவர் இடம்பெறும் காட்சிகளில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி இயல்பாக அமைந்துள்ளது. கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துல் சமத் உள்ளிட்ட நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் ரேவதி கவனத்தை ஈர்க்கிறார். கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு மலைப்பகுதி காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் காட்சிகளுடன் இணைந்து பயணிக்கிறது. தொடக்கத்தில் பீல்குட் படமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக ஆக்‌ஷன் களத்துக்குள் செல்கிறது. இந்த மாற்றம் வியப்பை ஏற்படுத்தினாலும், திரைக்கதை அதை ஓரளவு நேர்த்தியாக கையாண்டுள்ளது. அதே நேரத்தில், சில காட்சிகளில் லாஜிக் சார்ந்த கேள்விகளும் எழுகின்றன. காதல் மற்றும் ஆக்‌ஷன் இரண்டையும் இணைத்து மாறுபட்ட அனுபவத்தை வழங்க முயன்றுள்ளார் இயக்குனர் ஆர்.கார்த்திகேயன். குறிப்பாக படத்தின் கடைசி 10 நிமிடங்கள் ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்ததாக அமைந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு