Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 24 அக்டோபர் 2026 | 7 ஐப்பசி பராபவ வருடம்

6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தென் தமிழகத்தின் அருகிலுள்ள பகுதிகள் மற்றும் கேரளாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்தது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து, கேரளா வழியாக வட தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது.

Advertisement
இந்த வானிலைச் சூழல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி வரை **நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சேலம்** ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு