Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 24 அக்டோபர் 2026 | 7 ஐப்பசி பராபவ வருடம்

நீலகிரிக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

நீலகிரிக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் மண் தளர்ந்து, சாலைகளில் சரிந்து விழுகிறது. குறிப்பாக, பர்லியார் அருகே திடீரென ஏற்பட்ட மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, பர்லியார் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகளும் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி பாதுகாப்பாக வெளியேறினர். அதேநேரத்தில், மண் குவியலில் சிக்கியிருந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement
சாலையில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினரும் உள்ளூர் நிர்வாகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மண் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் மழையால் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளைச் சீரமைக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு