6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
24 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தென் தமிழகத்தின் அருகிலுள்ள பகுதிகள் மற்றும் கேரளாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்தது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து, கேரளா வழியாக வட தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது. இந்த வானிலைச் சூழல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.