Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகப் பகுதிகள் வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கனமழைக்கு வாய்ப்பு 16-09-2026 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 17-09-2026 நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 18-09-2026 நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இதேபோல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். 19-09-2026 நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் பிற வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யலாம். தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21-09-2026 நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை செப்டம்பர் 16 முதல் 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எப்படி இருக்கும்? 16-09-2026 அன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும். 18-09-2026 அன்று தெற்கு அந்தமான் கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசலாம். 19-09-2026 அன்று அந்தமான் கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும். மேலும், அந்தமான் கடலின் பிற பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு